|
|
|
|
|
NEWS IN DETAIL
|
|
|
 |
நேற்று செவ்வாய்க்கிழமை காலையிலிருந்து ஒன்று கூடிய நூற்றுக்கணக்கான
குடும்பநல ஆலோசனை தாதிமார், பொதுச் சுகாதார அதிகாரிகள், மருத்துவத்
தாதிமார் மற்றும் பிற சுகாதார சேவை பணியாளர்கள் யாழ்ப்பாணம் பொது சுகாதார
சேவைகள் அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலணை
மருத்துவத் தாதி தர்ஷிகாவின் கொலை குறித்த விசாரணையை உடனும் ஆரம்பிக்க
வேண்டும் என்று இவர்கள் கோரிக்கை வைத்து இந்தப் போராட்டத்தை நடத்தினர்.
அதோடு குற்றம் சாட்டப்பட்டுள்ள சிங்கள மருத்துவர் பிரியந்த செனவிரட்ணவை
உடனும் கைது செய்யவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
எனவே இலங்கை
இராணுவத்தின் பணிப்பின் பேரில் இடமாற்றம் செய்யப்பட்ட குறித்த சிங்கள
மருத்துவரைக் கைது செய்ய வேண்டிய கட்டாயம் போலீசுக்கு ஏற்பட்டது.
இதையடுத்து, யாழ்ப்பாணத்திலுள்ள பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின்
அலுவலகத்தில் பாதுகாப்புக் கொடுத்து வைத்திருக்கப்பட்ட சிங்கள மருத்துவர்
நேற்று உடனும் கைது செய்யப்பட்டு, ஊர்காவற்றுறை நீதிமன்றில் ஆஜர்
செய்யப்பட்டார். |
|
Source From : pathivu
|
|
 |
|
|
|
|
|
|
|
|
|
|
|