Home | Contact | Sitemap  
      NEWS IN DETAIL  
யாழ்ப்பாண அரசாங்க அதிபராக இன்று இமெல்டா சுகுமார் பதவியேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண செயலகத்தில் இன்று பிற்பகல் 2.20 மணிக்கு அவர் தமது பொறுப்புக்களை முன்னாள் அரசாங்க அதிபர் கே கணேஸிடம் இருந்து ஏற்றுக்கொண்டார்.

ஏற்கனவே இந்த பதவி ஏற்பு கடந்த முதலாம் திகதி நடைபெறவிருந்த போதும், அது பின்னர் பிற்போடப்பட்டது.

இந்தநிலையில் யாழ்ப்பாண அரசாங்க அதிபராக கே கணேஸ் இன்று வரை கடமையாற்றி வந்தார்.

இதேவேளை கிளிநொச்சியின் முன்னாள் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் முல்லைத்தீவின் அரசாங்க அதிபராக பதவியேற்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.

அது தொடர்பான தகவல்களுக்காக வேதநாயகத்தை தொடர்புகொண்டபோது தாம் முக்கிய கலந்துரையாடல் ஒன்றில் இருப்பதாக தெரிவித்தார்.


Featured Jobs
Career Guidance
More Information
Training