|
அரசியலமைப்புத்
திருத்தம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க
பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் எதிரணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை
நடத்தவிருப்பதாக தெரிவித்திருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி, சிறுபான்மை
பிரதிநிதித்துவம், சிறிய கட்சிகளுக்கான வாய்ப்பு, உள்ளூராட்சித் தேர்தல்
முறை மாற்றம் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தவிருப்பதாகவும்
சுட்டிக்காட்டியது.
நேற்று
முன்தினம் திங்கட்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க
தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி பிரதிநிதிகள் குழு
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னர்
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க எதிர்க்கட்சித்
தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை விசேட செய்தியாளர் மாநாடொன்றை
நடத்தினார். அதன் போதே இது தொடர்பில் எதிர்க்கட்சிகளுடன் நடத்தவிருக்கும்
பேச்சுவார்த்தை குறித்து அவர் விளக்கமளித்தார். |