|
|
|
|
|
NEWS IN DETAIL
|
|
|
 |
தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு மாணவர்களைச் சேர்க்க
இந்திய மருத்துவக் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
தர்மபுரியில்
அரசு மருத்துவக் கல்லூரி 2008ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும்
இந்தக் கல்லூரியின் வசதிகளை இந்திய மருத்துவக் கவுன்சில் குழு ஆய்வு செய்தே மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி
அளித்து வருகிறது.
இந்த ஆண்டும் இந்திய மருத்துவக் கவுன்சிலின்
புதிய குழுவைச் சேர்ந்த அதிகாரிகள் கல்லூரியை ஆய்வு செய்தனர். இதையடுத்து
மாணவர்களைச் சேர்க்க நேற்று அனுமதி அளித்தனர்.
இந்தக் கல்லூரியின்
மொத்தம் 100 இடங்கள் உள்ளன. இதில் தமிழக மாணவர்களுக்கு 85 இடங்கள்
ஒதுக்கப்படும்.
அதே போல விழுப்புரம், திருவாரூர் ஆகிய புதிய அரசு
மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்கவும் இந்திய மருத்துவக்
கவுன்சில் நேற்று முன் தினம் அனுமதி அளித்தது.
இதன்மூலம் அரசு
மருத்துவக் கல்லூரிகளில் தமிழக ஒதுக்கீட்டுக்கு 255 இடங்கள் கிடைத்துள்ளன. |
|
Source From : thatstamil.oneindia
|
|
 |
|
|
|
|
|
|
|
|
|
|
|